ஆன்மீகம்

திருச்செந்தூர் முருகன் கோயில்   சிறப்பு ஆராதனை!

சுமார் 367  ஆண்டுகளுக்கு முன்னர் (17-01-1648 )ஆண்டு இதே நாளில் கடல் மார்க்கமாக வந்த டச்சுப் படையினர் திருச்செந்தூர் முருகன் கோவிலை கைப்பற்றினர்
 அந்த சமயத்தில் ஆட்சியில் அப்பகுதியில் இருந்த திருமலை நாயக்கர் ஒரு பெரும்படையுடன் சென்று டச்சுக்காரர்கள் எதிர்த்தாா்
எனினும் முயற்சி தோல்வியில் முடிந்தது டச்சுக்காரர்கள் கோயிலிலின் நகைகளை கொள்ளை அடித்தது மட்டுமல்லாமல் அங்கிருந்து ஸ்ரீ சண்முகர் மற்றும் நடராஜர் உற்சவர் சிலைகளை தங்க விக்கிரகம் என்று எண்ணி கடத்திச் சென்றனர் 
கடல்வழியே தங்கள் பயணத்தின் போது இந்த இரு விக்கிரகங்களையும் உருக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் அப்போது திடீரென்று வீசிய சூறாவளி காற்று மற்றும் பெரும் மழையால் அவர்கள் சென்ற கப்பல் நிலை தடுமாறியது தங்கள் தவறை உணர்ந்த டச்சுக்காரர்கள் அந்த இடத்திலேயே இந்த இரு விக்கிரகங்களையும் கடலில் வீசிவிட்டு சென்றனர் இச்சம்பவம் இன்றளவும் டச்சுக்காரர்கள் இராணுவ குறிப்பில் இடம் பெற்றுள்ளது 
சுமார் ஐந்து வருடங்கள் கழித்து புதிய விக்கிரகங்களை உருவாக்கும் முயற்சியில் மன்னர் ஈடுபட்ட சமயத்தில் வடமலையப்பா் எனும் முருக பக்தரின் கனவில் விக்கிரகம் கடலில் கிடைக்கும் இடத்தில் ஒரு எலுமிச்சம் கனியும் அதன்மேல் கருடன் வட்டமிடுவதாகவும் தனது கனவில் தோன்றியதாக மன்னரிடம் தெரிவித்தார் தானே தன் கனவில் தோன்றிய இடத்தை கண்டுபிடித்து கடலில் நீந்திச் சென்றாா் அதிசய நிகழ்வாக அந்த இடத்தில் மீண்டும் சண்முகர் சொரூபம் கண்டெடுக்கப்பட்டு மீண்டும் திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிறந்தநாளை முன்னிட்டு இன்று திருச்செந்தூரில் சண்முகருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது இந்த நிகழ்வில் அரசின் தடை உத்தரவு உள்ளதால் பக்தர்கள் இன்றி நடைபெற்றது
நீதிதேவதை செய்திகுழு….
மேல்மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு பங்காரு அடிகளார் மனைவி மற்றும் மகன் போட்டி இடுகின்றனர். இந்நிலையில் பங்காரு அடிகளாரின் மனையின் சொத்து மதிப்பு தெரியவந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் ஊராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக, பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் மாற்று வேட்பாளராக பங்காரு அடிகளாரின் மகன் செந்தில்குமாரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். முன்னதாக போட்டியிடும் லட்சுமி இதற்கு முன் 2 முறை மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மேல்மருவத்தூர் ஊராட்சி பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட காரணத்தினால், இவர்கள் போட்டியிட முடியாத சூழல் உருவானது. மீண்டும் இந்த ஊராட்சி பொதுத் தொகுதியாக மாற்றி உள்ளதால், வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் இருவரை தவிர மேல்மருவத்தூர் ஊராட்சிக்கு இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை. எனவே இருவர் மனுக்கள் ஏற்கப்பட்டால், அதில் ஒருவர் மனுவை திரும்பப் பெற வாய்ப்புள்ளது. மனுதாக்கல் செய்ததன் மூலம் பங்காரு அடிகளார் மனைவியின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 250 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது.