செய்தி துளிகள்

சென்னை தண்டையார்பேட்டை சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார் இவரது அக்கா மகள் தமிழரசியை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு மகரஜோதி(14) கீர்த்திகா (10) இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர் கடந்த 3 ஆண்டுகளாக கணவன் மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

தமிழரசி சென்னை புது வண்ணாரப்பேட்டையில் உள்ள தீலிப் மொபைல் என்ற பெயரில் கடை வைத்து செல்போன் விற்பனை செய்து வருகிறார் இந்நிலையில் இன்று காலை தமிழரசி கடைக்கு வந்த கணவன் முருகன் தமிழ் அரசிடம் தனக்கு விவாகரத்து கேட்டு வெள்ளை காகிதத்தில் கையெழுத்து போடும்படி கூறியுள்ளார் இதனை மறுத்த தமிழரசி மீது முருகன் கையில் வைத்திருந்த ஆசிட்டை எடுத்து முகத்தை வீசியுள்ளார் இதில் கண் பகுதியில் ஆசிட் பட்டு லேசான காயங்கள் பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இச்சம்பவம் குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

புது வண்ணாரப்பேட்டையில் தமிழரசி,