கோவை மருத்துவர் சாதனை

கால் எலும்பை நீக்காமல் இந்தியாவின் முதல் வெற்றிகரமான எலும்பு கட்டி அறுவை சிகிச்சை: புற்றுநோயை வென்றார் ஒன்பது வயது சிறுமி

கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா:

தொடைப்பகுதியில் வீக்கம் உள்ளதா என்று பரிசோதித்தபோது ஒன்பது வயது சிறுமியின் காலில் மிகவும் அரிதான எலும்பு கட்டி கண்டறியப்பட்டது. இதை அடுத்து சிறுமியின் காலில் எந்த ஒரு எலும்பையும் நீக்காமல் கோயமுத்தூரில் முதல் வெற்றிகரமான எலும்பு கட்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

மார்ச் 2021 இல், ஒன்பது வயது சிறுமியின் பெற்றோர் குழந்தையின் இடது தொடையில் வீக்கம் ஏற்பட்டதற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் எலும்பியல் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றனர். முழுமையான பரிசோதனைக்குப் பிறகு, சிறுமி எலும்புக் கட்டியின் அரிய வடிவமான ஈவிங்ஸ் சர்கோமாவால் (Ewing’s sarcoma)பாதிக்கப்பட்டிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

ஈவிங்ஸ் சர்கோமா ( Ewing’s sarcoma) என்றால் என்ன?

ஈவிங்ஸ் சர்கோமா என்பது எலும்புகளில் ஏற்படும் அரியவகைப் புற்றுநோய், இது பொதுவாக குருத்தெலும்பில் அல்லது இடுப்பு பகுதியில் உள்ள நரம்புகளுக்கு அருகில் தொடையில் உள்ள எலும்பிலும் ஏற்படும்.

இப்புற்றுநோயின் காரணம் தெளிவாக இல்லை என்றாலும். இது முக்கியமாக 20 வயதுக்குட்பட்டவர்களை பாதிக்கிறது. சதைப் பரிசோதனை, CT ஸ்கேன் மற்றும் MRI ஸ்கேன் மூலம் வடிவத்தில் அதன் வளர்ச்சியைத் தீர்மானிக்க உதவுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்நோயினால் 5000க்கும் குறைவான பாதிப்புகள் பதிவு செய்யப்படுகின்றன.

சிறுமிக்கு எலும்பு கட்டி இருப்பது கண்டறியப்பட்ட பிறகு, மிக வேகமாக வளர்ந்து வரும் புற்றுநோய் செல்களைக் அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. புற்றுநோய் செல்களை ஒடுக்கவும் அழிக்கவும் சிறுமி கீமோதெரபிக்கு உட்படுத்தப்பட்டார். கீமோதெரபி என்பது உடலில் வேகமாக வளரும் செல்களைக் அழிக்கப் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான மருந்துகள் ஆகும்.

கீமோதெரபி சிகிச்சையின் 3 சுழற்சிகளுக்குப் பிறகு, கட்டியின் அளவு கணிசமாகக் குறைந்தது. சவாலான தொடை எலும்பை காலில் இருந்து வெட்டாமல் கட்டியை அகற்றுவதற்க்கும். குழந்தையின் காலைக் காப்பாற்றுவதற்கும், பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் புற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களின் மிகவும் அனுபவம் வாய்ந்த குழு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்வதற்கு தயாரானது.

குழந்தையின் வயது இந்த நிபுணர்களுக்கு மிகப்பெரிய சவாலானதாக இருந்தது, பொதுவாக பாதிக்கப்பட்ட எலும்பு அகற்றப்பட்டு மாற்றுக்கு உலோகங்களால் ஆன எலும்பு வடிவங்கள் உபயோகப்படுத்தப்படும். இச்சிறுமிக்கு நீளமான அளவு எலும்பு பாதிக்கப்பட்டிருந்ததால் உலோக மாற்றுமுறை இயலாததாகியது. எனவே எக்ஸ்ட்ராகார்போரியல் ரேடியோ தெரபி (extracorporeal radiotherapy) என்ற சிகிச்சையின் மூலம் பாதிக்கப்பட்ட எலும்பு அகற்றப்பட்டு பின் மீண்டும் எலும்புகள் சேர்க்கப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சை 10 ஜூலை 2021 அன்று செய்யப்பட்டது. ஒவ்வொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் புற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழுவினால் எடுக்கப்பட்டது. டாக்டர்கள் கட்டி அகற்றுதலை வெற்றிகரமாக செய்தனர் ப்ளேட்ஸ் மற்றும் ஸ்க்ரூஸ் மூலம் அகற்றிய எலும்பு மறுபடியும் பொருத்தப்பட்டது. கட்டி அகற்றுதல் பொதுவாக முழு எலும்பு அல்லது பகுதி அகற்றப்படுவதற்கு பதிலாக, புற்றுநோய் கட்டி மட்டும் சிறிய கீறல்களால் அகற்றப்பட்டு, உலோகம் உபயோகப்படுத்தப்படுகிறது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர்களின் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி எலும்புக்கு கதிர்வீச்சு பயன்படுத்தப்பட்டது. இந்த புதுமையான செயல்முறை SRIOR ஆல் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் அனைத்து எலும்பு கட்டி சிகிச்சைகளுக்கும் இம்முறை பயன்படுத்தபடுகிறது. எலும்பு துண்டிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, புற்றுநோயியல் துறையில் சமகால மாற்றங்களைக் கொண்டுவர SRIOR தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. குழந்தை சுமார் 10 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்ய பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. கவனிப்புக்குப் பிறகு, சிறுமி எழுந்து நடந்தார்

இந்த அறுவை சிகிச்சை புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் குழுவால் செய்யப்பட்டது: டாக்டர் கார்த்திகேஷ், டாக்டர் பார்கவி, எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள்: டாக்டர் மோகன், டாக்டர் கோகுல், கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர்கள்: டாக்டர் கார்த்திகா, டாக்டர் கிருஷ்ணபிரியா, டாக்டர் விவேக், டாக்டர் சேதுமாதவன், மயக்க மருந்து நிபுணர்: டாக்டர் ஜிபி . சுந்தர்ராஜ், மற்றும் மருத்துவ புற்றுநோயியல் நிபுணர்: டாக்டர் பி. குஹான், SRIORன் இயக்குநர் அவர்களின் கூட்டுப் பார்வையும் உறுதியும் புற்றுநோயிலிருந்து மீண்டவரை வீடு திரும்பச் செய்தது.

மருத்துவ தொழில்நுட்பத்தில் புதுமையுடன், புதிய அணுகுமுறைகள் மற்றும் நுட்பங்கள் முன்னேற்ற சிகிச்சைக்கு வழிவகுத்தன. இப்பகுதியின் முதல் வெற்றிகரமான எலும்பு கட்டி அறுவை சிகிச்சையை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை செய்துள்ளது.

மருத்துவத் துறையில் நிபுணர்களாக இருக்கும் மருத்துவர்களுடன் கலந்தாலோசிக்க மருத்துவமனைக்குச் செல்லவும்.

உடல்நலப் பிரச்சினைகளுக்கு உடனடி ஆலோசனை தேவைப்படுவோர்க்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர்கள் ஆன்லைன் வீடியோ கால் மூலம் ஆலோசனையை (https://www.sriramakrishnahospital.com) வழங்குகிறார்கள்.

பயனுள்ள சிகிச்சையை வழங்க டாக்டர்கள் 24 மணி நேரமும் இருக்கிறார்கள். ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் சேவைகள் உலகளாவிய அளவுகோல்களுக்கு இணையாக உள்ளன, மக்களுக்குத் தேவையான சிகிச்சையைப் பெறுவதை உறுதி செய்கிறது.பகிர்கபக்கம் விரும்பியுள்ள பக்கங்கள்

அரசு ஊழியர்கள் வாங்கும் லஞ்சங்கள் பற்றியும் , காவல் துறையினரின் செய்யும் அதிகார துஷ்பிரயோகங்கள் பற்றியும் , அரசியல் வாதிகளின் அராஜகங்களை பற்றியும் , ரவுடிகளின் அட்டூழியங்கள் பற்றியும் , தெரிவிப்பது.

Leave a Response