கொடிய நோய் கோவிட் பற்றிய கட்டூரை

ஓரு குழந்தையின் இதயத்தில் கோவிட் -19 பாதிப்பிற்கு பின் ஏற்படும் விளைவுகள்
கோவை, தமிழ்நாடு: கோவிட் -19 பாதிப்பு மனித உடல் ஆரோக்கியத்தில் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது. பெரியவர்களை விட குழந்தைகளுக்கு அதிக பாதகமான பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இருதய அமைப்பு மற்றும் சுவாச அமைப்புகளின் செயல் திறன் கோவிட் -19 பாதிப்பிற்கு பின் கடுமையாக பாதிப்படைகிறது.
குழந்தைகளில் நோயெதிர்ப்பு சக்தி போதிய வளர்ச்சியடையாததால், உடலில் கோவிட் -19 வைரஸ் வேகமாக பரவுகிறது. சில வாரங்களுக்குள் கொரோனா வைரஸ் பாதிப்பு தணிந்தாலும், அதன் பாதிப்பினால் ஏற்படும் பின்விளைவுகள் மேலும் சிறிது காலம் நீடிக்கும். கோவிட்-19 வைரஸ் மனித உடலில் நுரையீரல், மூளை மற்றும் இதயம் போன்றவரை வெகுவாக பாதிக்கிறது. இது இதயத் தசைகளை பாதிப்பது மட்டுமில்லாமல் இதயத் துடிப்பை குறைக்கவும் செய்கிறது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை குழந்தைகளுக்கென பிரதியோக கோவிட்-19 உயர்தர சிகிச்சை மற்றும் கோவிட்-க்குப் பிந்தைய மேற்கொள்ளவேண்டிய பரிசோதனைகள் என அனைத்து சேவைகளையும் வழங்கிவருகிறது.
கோவிட்-19 என்பது வயது வித்தியாசமின்றி அனைவரையும் பாதிக்கும் ஒரு கொடிய வைரஸ் என்பதை நாம் அறிவோம். சிலர் லேசாக பாதிக்கப்படலாம், சிலர்க்கு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். குழந்தைகளும் கோவிட்-19 வைரஸ் மூலம் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு. கோவிட்-19 வைரஸ் பாதிக்கப்பட்ட தாய் மூலம் குழந்தைகளுக்கு தொற்று ஏற்படலாம்.
இந்த தொற்றுநோயை விரைவில் கண்டறிந்து குணம் அடைந்த பிறகும் பாதிப்படைந்தவர்களும், குறைந்தது ஒரு மாதத்திற்குப் பிறகு அதன் பாதிப்பின் பின்விளைவுகளை உணரலாம்.
கோவிட்-19 பாதிப்பு பல்வேறு காலங்களில் பல்வேறு வகையான மருத்துவப் பிரச்சினைகளின் கலவையாக கொண்டிருக்கும். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவருக்கும் கோவிட் 19 அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருக்கும்.
குழந்தைகளில் கோவிட்-19 பாதிப்பிற்கு பின் ஏற்படும் விளைவுகள் என்பது மல்டி-சிஸ்டம் அழற்சி நோய்க்குறி-MIS-C எனப்படுகிறது. இது உயிருக்கு ஆபத்தானது, ஏனெனில் இது இருதய அதிர்ச்சியையும் மரணத்தையும் ஏற்படுத்துகிறது. மேலும் இதயம் சாதாரணமாக ஓய்வெடுப்பதையும், சரியாக துடிப்பதையும் தடுக்க செய்கிறது.
ஆரோக்கியமான வாழ்க்கை, குறுகிய மற்றும் நீண்ட காலத்திற்கு நோய்களை வெல்லும் திறனைக் கொண்டிருப்பதே நாம் முக்கிய குறிக்கோளாக கொண்டிருக்க வேண்டும். ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் (https://www.sriramakrishnahospital.com) குழந்தை இருதயநோய் நிபுணர்கள் கொடிய வைரஸ் மற்றும் அதன் சிக்கல்களை எதிர்கொள்ள சிறந்த மருத்துவ சிகிச்சை/சேவைகளை வழங்கி வருகிறார்கள்.
கோயம்புத்தூரில் உள்ள சிறந்த குழந்தை இருதயநோய் நிபுணர்களுடன் கலந்தாலோசிக்க ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையை தொடர்புகொள்ளுங்கள்.
நீங்கள் தொலைதூரத்தில் இருந்தால், உங்கள் உடல்நலப் பிரச்சினைகள் குறித்த உடனடி ஆலோசனை சேவைகளுக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர்கள் ஆன்லைன் வீடியோ கால் (telemedicine.sriramakrishnahospital.com) மூலம் ஆலோசனையை வழங்குகிறார்கள். பயனுள்ள சிகிச்சையை வழங்க டாக்டர்கள் 24 மணி நேரமும் சேவைபுரிகின்றனர். ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் சேவைகள் உலகளாவிய அளவுகோல்களுக்கு இணையானது, மக்களுக்குத் தேவையான நேரத்தில் தேவையான மருத்துவ சேவைகள் கிடைப்பதை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை எப்பொழுதும் உறுதி செய்கிறது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை பற்றி
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை 1975 இல் தொடங்கப்பட்ட ஒரு புகழ் பெற்ற மருத்துவ நிறுவனம். கோயம்புத்தூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை பல வழிகளிலும் சேவைகளாலும் மருத்துவ வரலாற்றின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. உண்மையில், இது நவீன இந்தியாவின் சுகாதாரப் புரட்சியின் ஒருங்கிணைந்த பகுதியாகும். எஸ்என்ஆர் சன்ஸ் தொண்டு நிறுவனத்தால் நிறுவப்பட்டு நடத்தப்படும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறது. உயிர்க்கொல்லி நோய் பாதிப்புகள் முதல் அன்றாட வியாதிகளுக்கான சிகிச்சைகள் வரை, அதிநவீன தொழில்நுட்பம், அதிநவீன அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ நுட்பங்களைப் பயன்படுத்தி அனைத்து தரப்பு நோயாளிகளுக்கும் சிறந்த மருத்துவ சேவைகளை வழங்கிவருகிறது.
https://www.youtube.com/c/SriRamakrishnaHospital
https://www.facebook.com/SriRamakrishnaHospital
https://en.wikipedia.org/wiki/Sri_Ramakrishna_Hospital

Leave a Response