நம்மில் சிலர் மட்டுமே ஸ்பைரூலினா பற்றி கேள்விப்பட்டிருப்ப்போம். ஸ்பைரூலினா என்றால் என்ன? என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
ஸ்பைரூலினா என்பது ஒரு செல் புரத பாசி வகையைச் சேர்ந்தது. ஈரப்பதத்தில் வளரக் கூடிய மிகவும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய இது கடற்பாசி வகையை சேர்ந்தது. இதனைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளையும், சக்தியையும் முன்னரே நாம் அறிந்திருந்தால், இன்று நம்மைத் தாக்கும் பல பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கலாம்.
ஸ்பைரூலினாவில் பச்சையம் அதிகம் உள்ளதால் தான் இது பச்சை நிறத்தில் உள்ளது. மேலும் இது வெப்பமான பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் அதிகம் வளரக்கூடிய பாசி. இதில் புரோட்டீன் சத்துக்கள் அதிகம் உள்ளன.
இந்த ஸ்பைரூலினா பொடி, மற்றும் மாத்திரைகள் மற்றும் பொடி வகைகளில் கடைகளில் கிடைக்கிறது. இதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்த இதனை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், நாம் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறலாம்.
ஸ்பைரூலினாவின் நன்மைகள்
இது நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கும் பெரும் ஆற்றல் கொண்டது. 55-65% உள்ள புரதம் உடலில் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவருக்கும் ஏற்ற இணை உணவாகும். இதில் உள்ள இரும்புச்சத்து இரத்த சோகை நோய் வராமல் தடுக்கிறது.
ஸ்பைரூலினாவில் பால், முட்டை மற்றும் பருப்பு வகைகளை விட அதிகமான அளவிலான புரோட்டீன்கள் 60 முதல் 70 சதவீத வரை உள்ளன. உள்ளது. எனவே இதனை தினமும் உட்கொண்டு வருவதன் மூலம் புரோட்டீன் குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படுவதோடு, தலை முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
காமா-லினோலினிக் அமிலம்
இது ஒமேகா-6 ஃபேட்டி அமிலம். மேலும் ஸ்பைரூலினாவில் நோயெதிர்ப்பு அழற்சித் தன்மை அதிகம் உள்ளதால், இது உடலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும் உணவுப் பொருளாகும்.
அமினோ அமிலங்கள்
இதன் ஆய்வில் ஸ்பைரூலினாவில் அனைத்து வகையான அமினோ அமிலங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த அமினோ அமிலங்கள் உடலில் புரோட்டீன் அளவை அதிகரித்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
வைட்டமின்கள்
இதில் வைட்டமின்களான ஏ, பி, சி, டி மற்றும் ஈ உள்ளது. ஆய்வுகளில் இதில் சூடோவைட்டமின் பி12 மற்றும் வேறுபல வைட்டமின்களும் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
கனிமச்சத்துக்கள்
ஸ்பைரூலினாவில் உடலுக்கு தேவையான மைக்ரோ கனிமங்கள் மற்றும் மேக்ரோ கனிமங்கள் வளமாக உள்ளன. அதில் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சோடியம், ஜிங்க் மற்றும் குரோமியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. முக்கியமாக இதில் பாலை விட அதிக அளவில் கால்சியம் உள்ளது.
உடல் சுத்தமாகும்
இவற்றில் பச்சையம் அதிகமான அளவில் காணப்படுவதால் இது உடலை நச்சுக்களின்றி சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். எனவே உங்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமானால், தினமும் சிறிது ஸ்பைரூலினாவை உட்கொள்ளுங்கள்.
நீரிழிவு
நீரிழிவு நோயாளிகள் வெறும் வயிற்றில் ஸ்பைரூலினாவை எடுத்தால், 6 வாரத்தில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் சரும பிரச்சனைகள், பாதத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
புத்துணர்ச்சி அளிக்கும்
ஸ்பைரூலினாவை தினமும் உட்கொண்டு வந்தால், நாள்பட்ட களைப்பைப் போக்கி, நன்கு சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கலாம்.
எடை குறையும்
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், ஸ்பைரூலினாவை உட்கொண்டு வருவதன் மூலம் எளிதில் குறைக்கலாம். எப்படியெனில், இதனை உட்கொண்டால், அடிக்கடி பசி ஏற்படுவது குறையும். இதன் மூலம் உடலில் கலோரிகளின் அளவைக் குறைத்து, உடல் எடையை வேகமாக குறைக்கலாம்.
ஒரு நாளைக்கு 500 மி.கி அளவு எடுத்துக் கொள்வது நல்லது. முதலில் ஆரம்பிக்கும்போது குறைந்த அளவிலிருந்து சாப்பிட வேண்டும். இதனை சாப்பிடும் போது அதிக அளவில் நீரை குடிக்க வேண்டும்.