செய்தி துளிகள்

அரசியல் அறிவியல் மாணவர் பேரவை தேர்தல் அசத்தலாக நடத்திய நாகலாபுரம் எஸ்.ஏ.என். பள்ளி.
——————————————————————

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல் நிலைப்பள்ளி அரசியல் அறிவியல் மாணவர் பேரவை தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பள்ளி வளாகத்தில் நடந்தது.

தலைமை ஆசிரியை சுப்புலட்சுமி வரவேற்றார். பள்ளி வளர்ச்சிக்குழு தலைவர் தங்கமணி தலைமை வகித்தார். தேர்தல் குழுத் தலைவர் தூத்துக்குடி மாவட்ட உதவி ஆணையாளர் கலால் பிரிவு கண்காணிப்பாளர் ஆறுமுகச்சாமி (பணி ஓய்வு) மற்றும் பள்ளி செயலாளர் பால்பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் தேர்தல் நடந்தது.
முன்னதாகக் குறிப்பாகத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் வேட்பாளர் பரிசீலனை மற்றும் சின்னம் ஒதுக்கீடு, இறுதி வேட்பாளர் மற்றும் பிரச்சாரம் ஆகியவையும் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு மாணவ – மாணவிகள் விரலில் மை, வாக்குச் சீட்டு, அனுமதி உட்பட +1,+2 மாணவ-மாணவியர்களுக்கு மத்தியில் வாக்களிப்பதின் அவசியம் என்ன என்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகப் பயிற்சி வழங்கப்பட்டன.
பள்ளியின் +1,+2 மாணவ, மாணவியர் அனைவரும் 2ஓட்டளித்தனர். தேர்தல் நமது முன்னோர் பயன்படுத்திய வாக்குச் சீட்டுகள் முறையைப் பின்பற்றி நடத்தப்பட்டது. பொது தேர்தல்போல நடைபெற்ற தேர்தல் வாக்கு பதிவில் மாணவ – மாணவிகள் “உங்கள் ஓட்டு உங்கள் கடமை” என்பதை உணர்ந்து அமைதியாக நின்றபடி வாக்களித்தனர். மேலும் தேர்தல் முறைகளைப் பற்றி மாணவ, மாணவிகள் பள்ளியில் பயிலும் போதே அறிந்து கொள்வதற்காகவும் கல்வி மட்டுமல்லாமல் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் மாணவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாகத் தேர்தல் நடந்தது குறிப்பிட தக்கது. 290 மாணவ- மாணவியர்களில் 233 நபர்கள் தங்களின் வாக்குப் பதிவு செய்தனர்.
தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ரவிச்சந்திரன், சுரேஷ்குமார், நிர்வாக ஆசிரியர் ஞானசேகர், சாந்தி, மற்றும் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
மாணவர்கள் கட்டுப்பாடு செயல்பாடுகளை உடற்கல்வி ஆசிரியை நர்மதா செய்தார். போட்டியில் பங்கு பெற்ற மாணவ வேட்பாளர்கள் அமிர்தவள்ளி, ஆயிஷா, காயத்ரி, சுகராகினி, அழகுபாண்டி, பாலமுருகன், தினேஷ், மேகலிங்கம் மற்றும் தேர்தல் நடத்திய மாணவ- மாணவியர்களை ஆசிரியர்கள், அலுவலர்கள், நிர்வாகப் பொறுப்பாளர்கள் உட்பட சக பள்ளி மாணவ-மாணவியர்கள்அனைவரும் வாழ்த்தினர்.

குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் ஆட்டோ டிரைவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் அவர்களின் அறிவுரை…..

ஆட்டோவில் செல்லும் குழந்தைகளின் எதிர்காலத்தையும், உங்களை நம்பி தங்கள் குழந்தைகளை உங்கள் ஆட்டோவில் அனுப்பிவிடும் பெற்றோர்களையும், உங்கள் குடும்பத்தாரையும் மனதில் வைத்துக்கொண்டு கவனத்துடன் வாகனத்தை ஓட்ட வேண்டும், நிர்ணயிக்கப்பட்ட இருக்கைகளை விட அதிக குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றிச் செல்லக்கூடாது, மதுபோதை மற்றும் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது, விபத்தில்லாமல் வாகனம் ஓட்டவேண்டும் என பல அறிவுரைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.