குறிப்புகள்

துணியில் சாயம் ஒட்டி விட்டதா? கவலை வேண்டாம் இதை பயன்படுத்துங்க!

நம் வீடுகளில் துணிகளை சாயம் போகும் துணியோடு தெரியாமல் சேர்த்து ஊற வைத்து விடுவோம். கலர் சாயம், அந்த துணியில் ஒட்டிக்கொள்ளும். வீட்டில் இருப்பவர்கள் இதை ஒரு சண்டை ஆகவே மாற்றி விடுவார்கள். சாயம் ஒட்டி விட்டது என்று இனி இந்த சண்டையே உங்கள் வீட்டில் வராது.

சாயம்பட்ட வெள்ளை சட்டையாக இருந்தாலும், மற்ற கலர் துணிகளாக இருந்தாலும், பின் சொல்லக்கூடிய குறிப்பை பயன்படுத்தி அந்தத் துணியை துவைத்துப் பாருங்கள். ஒரே நிமிடத்தில் கை நோகாமல் சாயத்தை நீக்கிவிடலாம்.

ஒரு வாலியில் தேவையான அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது ஒரு சட்டை என்றால் அந்த ஒரு சட்டை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் 1/2 ஸ்பூன் அளவு பிலீச்சிங் லிக்விடை போட்டு விடவேண்டும். இந்த தண்ணீருடன் 1/2 எலுமிச்சம் பழத்தை எடுத்து சாறு பிழிந்து விட்டு, அதையும் நன்றாக தண்ணீரோடு கலந்து விடுங்கள். இப்போது சாயம் படிந்த சட்டையை இந்த தண்ணீரில் நனைத்து அப்படியே நன்றாக பிரட்டி பிரட்டி விடுங்கள். முப்பது செகண்ட் சட்டை இந்த பிளீச்சிங் தண்ணீரில் இருந்தால் போதும். சட்டையை வெளியே எடுத்து விட்டு சாயம் பட்ட இடத்தை லேசாக அந்த தண்ணீரில் நனைத்து நனைத்து கையால் கசக்கினால் சாயம் சுலபமாக நீக்கிவிடும். உடனடியாக இந்த சட்டையை நன்றாக நல்ல தண்ணீரில் 3 முறை அலசி விட்டு கம்ஃபோர்ட் போட்டு வெயிலில் காய வைத்து விடுங்கள்.