you are here Home » ஆன்மீகம்

ஆன்மீகம்

சித்தர்களை வணங்குதலின் தொடர்ச்சி

நமசிவய என்ற ஐந்து எழுத்து எவ்வாறு அண்டத்தை இயக்குகிறது என்று பல்வேறு நிலைகளிலிருந்து நமக்குத் தெளிவு பெறும் வகையில் விளக்குகிறார்கள் சித்தர் பெருமானார்கள். ஐந்தெழுத்தானதும் எட்டெழுத்தாம் பின்னும் 51 அக்ஷரம் தானாச்சு நெஞ்செழுத்தாலே நிலையாமல் அந்த நேசம் தெரியுமோ வாலைப்பெண்ணே என்று குதம்பை சித்தர் நமக்குத் தெளிவுபடுத்துகிறார். அதாவது, “நமசிவய” என்ற ஐந்து எழுத்து, தன்னுள் அடங்கியுள்ள அஉம (ஓம்) என்ற பிரணவத்துடன் சேர்ந்து எட்டு எழுத்து ஆகிறது. இந்த எட்டு எழுத்தும் 51 எழுத்துக்களாகத் தன்மயமாய் உருவானது. இதுவே, அண்டத்தில் அனைத்து இயக்கங்களுக்கும் ஆதாரமாக அமைகிறது என்று விளக்குகிறார். “ஓம்” என்றெழுத்தும் இருக்குதடி, அதற்குள் ஊமை எழுத்தும் இருக்குதடி “ஆம்” என்ற எழுத்தை அறிந்து கொண்டு விளையாடிக் கும்மி அடியுங்கடி என்று பிரணவரகசியத்தை பற்றிக் கொங்கணர் பெருமானார் எடுத்துரைக்கிறார். மேலும், பஞ்சாக்ஷர ரகசியத்தைப் பற்றிச் சிவவாக்கியம் பெருமான் கூறுகையில், நவ்விரண்டு காலதாய், நவின்ற வவ்வு வயிரதாய், சிவ்விரண்டு தோளதாய், சிறந்த வவ்வு வாயதாய், அவ்விரெண்டு கண்ணதாய் எழுந்து நின்ற நேர்மையில் சிவ் வை ஒத்து நின்றதே “சிவய” அஞ்செழுத்துமே என்று கூறுகிறார். ஆதார மூலத்து அடியில் கணபதியை பாதார விந்தம் பணிந்து நிற்பது எக்காலம் நமது உடலில், மூலாதார சக்கரத்தில் ஒடுங்குவதை பற்றிப் பத்ரகிரிப் பெருமானார் விளக்குகிறார்.

சித்தர்களை வணங்குதல் தொடரும்…….

ஸ்ரீராம் சுவாமி ஜி, சந்த் மஹாசபா,  மாநில தலைவர்.

சித்தர்களின் பெருமைகள்

சித்தர்கள் என்பவர்கள் யார்? அவர்களின் வேலைகள் என்ன? எங்கு இருக்கிறார்கள்?

சித்தத்தை சிவய (சிவன்) பால் வைத்தவர்களே சித்தர்கள் ஆவார்கள் . அவர்கள் சிவ வுடன் இரண்டறக் கலந்தவர்கள் . அஷ்டமா சக்தி(சித்தி) களை (எட்டு மஹா சக்திகளை) பிரயோகிக்க வல்லவர்கள் . அண்டத்தில் எங்கு வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் ஊடுருவிச் செல்லும் மிகுந்த வல்லமை பெற்றவர்கள் . ஜீவராசிகளிடத்தில் பேதமை அற்றவர்கள் . தன்னலம் இல்லாதவர்கள். தர்மம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அனைவருக்கும் போதனை செய்து , உண்மை நிலைக்கு உயர உதவுபவர்கள் . அண்டத்தின் இயக்க ரகசியங்களையும், பிண்டத்தின் இயக்க ரகசியங்களையும் நமக்கு எடுத்துரைப்பவர்கள் . ஒவ்வொரு செயலுக்கான விளைவுகளையும் மிகவும் துல்லியமாக எடுத்துரைப்பவர்கள் . முக்காலத்தையும் உணர்ந்தவர்கள் . “சித்தர்” என்பது ஒரு பெயரோ அல்லது பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொள்ளப்படும் புனைபெயரோ அல்ல . அது ஒரு உண்மையுடன் கலந்த பரிபூரண நிலை யாகும் . நமசிவய என்ற ஐந்து எழுத்து (பஞ்ச + அக்ஷரம் = பஞ்சாக்ஷரம்) எவ்வாறு அண்டத்தை படைத்து, காத்து, அழித்து, அருளி இயக்குகிறது ? அது தன்னுள் கொண்டிருக்கும் அ உ ம ( ஓம்) என்ற பிரணவத்துடன் சேரும்போது என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றது, “நமசிவய” தனக்குள் ஒன்றை ஒன்று மாறி மாறி சேரும்போது என்னென்ன விளைவுகள் ஏற்படுகிறது? என்பது அனைத்தையும் கூறும் வல்லமை பெற்றவர்கள் . நமது உடலுக்குள், மூலாதார நிலையில் சுருண்டு கிடக்கும் பாம்பானது நமக்கு ஏற்படுத்தும் இன்னல்களையும், அதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளும் யுக்திகளையும் எளிமையாக கூறி நம்மை காப்பவர்கள் . “சித்தர் பெருமார்கள்” அனைத்து ரகசியங்களையும் , நமக்காக எடுத்துரைத்தாலும் அவர்களை, அவர்களே வணங்கச் சொல்லும் விதமான குறிப்புகள் எங்கும் எதிலும் காணப்படவில்லை. போற்றுதலுக்குரிய சிவய த்தையே வணங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஆணையிடுகிறார்கள். ஏனெனில் சிவய த்தை தவிர நம்மை காக்கக்கூடிய பொருள் அண்டத்திலேயே இல்லை என்று அருதியிட்டுக் கூறுகிறார்கள். இவ்வாறான இறைநிலை ஈசர்களை தினந்தோறும் நாம் வணங்கி வருவதால் நமக்குத் தேவையான அனைத்து நன்மைகளையும், உண்மையான சந்தோஷங்களையும் தன்மயமாய் நம்மிடத்தில் வந்து அடைய பெரும் கருணை செய்கிறார்கள்.

சித்தர் பெறுமார்களை வணங்குவது தொடரும்………

ஸ்ரீராம் சுவாமி ஜி , சந்த் மஹாசபா , மாநிலத் தலைவர்.

அறிவோம் ஆன்மீகம்

1. வருடத்திற்கு ஒரு முறையாவது
குல தெய்வ கோயிலுக்கு சென்று வாருங்கள்

2. காடு, தோட்டம் சொந்தமாக இருந்தால் அங்கு கருப்பண்ண சாமி, முனீஸ்வரன் அல்லது எந்த தெய்வம் இருந்தாலும் அதற்க்கு முறையே செய்ய வேண்டிய பரிகாரங்களை
(பலி ?கொடுத்து) பூஜை செய்வது (முன்னோர்கள் வழி) செய்யுங்கள்

3.தென்புலத்தார் கடன்
(முன்னோர்களுக்கு) பங்காளிகள் ஒன்று சேர்ந்து குளம் அல்லது ஆற்றங்கரையில் தர்பணம் கொடுங்கள், அதை முறையே திதி கொடுக்கும் அந்தணரை வைத்து செய்வது நல்ல பலனை தரும்.

4. தங்களுக்கு பாத்திய பட்ட கோவில்களின் விழாக்களில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்

5. பாத்தியப்பட்ட சிவன்,பெருமாள் கோயில் அல்லது அருகாமையில் உள்ள சிவன் கோயிலுக்கு தேவையான பொருட்களை ஏதேனும் ஒன்றையாவது கொடுத்து வாருங்கள் உதாரணம் – பன்னீர், சந்தனம், பசுஞ்சாணத்தில் இருந்து செய்த விபூதி, குங்குமம் போன்றவை கொடுங்கள்

6. பிறந்த நாளை நட்சத்திரப்படி தமிழ் மாதத்தில் கொண்டாடுங்கள் கேக் வெட்டுவதை அசைவம் செய்வதை தவிர்த்திடுங்கள்

7.குல குருவை அழைத்து ஆத்மாத்த சிவபூஜை செய்யுங்கள் பங்காளிகள் அனைவரும் சேர்ந்து அல்லது நாள், கிழமை பார்த்து அவரை நேரில் சந்தித்து சஞ்சார வரி, மாங்கல்ய வரி* செலுத்தி குருவருளை பெறுங்கள்

8.உங்களுக்கு பாத்தியப்பட்ட மலைகோயில் (முருகன் கோயிலுக்கு) ஒவ்வொரு மாதமும் அல்லது 4 மதத்திற்கு ஒருமுறையாவது, படியில் பயணித்து முருகன் அருளை பெற்று வாருங்கள்

9.காடு, தோட்டம் இருந்தால் ஒரு நாட்டு மாட்டையாவது வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ளுங்கள்.

10.பனை விதைகளை குறைந்தது 10 ஆவது விதையுங்கள்.

11.செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் தர்மம், அறம் சார்ந்த விஷயங்களை செய்யுங்கள். (நல்ல பொது காரியங்களுக்கு துணை புரியுங்கள்).

12.தினமும் குறைந்தது 4மணி நேரமாவது சூரிய ஒளி உடம்பில் படும்படி வேலையை நிர்ணியங்கள்.

13.செக்கு எண்ணெய்வகைகளை பயன் படுத்துங்கள் பாரம்பரிய அரிசி, தானிய வகைகளை உணவில் பயன்படுத்துங்கள்.

14.டீ, காபி குடிப்பதை தவிர்த்து, மாற்றாக சுக்கு மல்லி டீ அல்லது சத்துமாவு குடியுங்கள்.

15.தங்கத்தில் முதலீடு செய்யுங்கள் அதைவிட நிலத்தில் முதலீடு செய்வது நல்லது.

சனியின் ஆட்சியும்,

குருவும் ராகுவும் இணைவும்,

4 கிரகண நிகழ்வுகளும்

நமக்கு மேலும் மன பக்குவம் அடைய வழிவகை செய்யும்.

ஆகவே பொறுமை, நிதானம், ஆகியவை நமக்கு நல்ல பலன்களை தரும்.

திதியும், பலியும்,
குருவும், பசுவும்

நம்மை வழி நடத்தட்டும்!

வாழ்த்துக்கள்….

%d