கோவை மருத்துவர் சாதனை

பக்கவாதம் பாதிப்பை பற்றிய மேலாண்மை அறிவு: 4½ மணி நேரத்தில் ஓர் உயிரை காக்கலாம். கோயம்புத்தூர் பக்கவாதத்திற்கு சிகிச்சையளிப்பதில் காலம் மற்றும் நேரம் முக்கிய பங்கு வகிக்கிறது, ஏனெனில் சிகிச்சையை குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட கால அளவில் முடிக்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை பக்கவாதம் மேலாண்மை மற்றும் பக்கவாதம் நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதற்கான வழிமுறைகளை பற்றிய விரிவான கண்ணோட்டத்தை இங்கே வழங்குகிறது. மூளையில் இரத்தக் குழாய் அடைப்பு அல்லது உடைப்பு காரணமாக ஆக்ஸிஜன் மற்றும் இரத்த ஓட்டம் தடைபடும் போது மனித உடலில் ஒரு பக்கவாதம் ஏற்படுகிறது. இது இறுதியில் மூளை செல்களின் இறப்பை ஏற்படுத்துகிறது. போதிய ஆக்ஸிஜன் இன்மை மற்றும் உயிரணு இறப்பின் விளைவாக, அது மூளைக்கு சேதத்தை ஏற்படுத்துவதால் மீளமுடியாத பாதிப்பாகவோ மற்றும் மரணத்திற்கு கூட வழிவகுக்கும். இஸ்கிமிக் ஸ்ட்ரோக்கின் மேலாண்மை (The Management Of Ischemic Stroke) அக்யூட் இஸ்கிமிக் ஸ்ட்ரோக் - Acute Ischemic Stroke (AIS) என்பது பொதுவாகக் கூறப்படும் பக்கவாதங்களில் ஒன்றாகும். இரத்த நாளத்தில் உறைதல் காரணமாக ஆக்ஸிஜன் விநியோகத்தில் குறுக்கீடு ஏற்படும் போது AIS ஏற்படுகிறது. AIS க்கு அவசர மருத்துவ உதவி தேவைபடுகிறது. ஒவ்வொரு நொடியும் ஓர் உயிரை காக்க முக்கியமாகிறது. இஸ்கிமிக் ஸ்ட்ரோக் (Ischemic Stroke) தொடங்கிய உடனேயே ஒவ்வொரு நிமிடமும் இரண்டு மில்லியன் நியூரான்கள் இறக்கின்றன என்று மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. மருத்துவத் துறையில் ஒவ்வொரு முன்னேற்றமும் மனிதகுலத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இதேபோல், பக்கவாத சிகிச்சையும் ஒரு கொடிய சூழ்நிலையிலிருந்து மக்கள்களை மீட்பதற்காக பல பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. மிகவும் பரவலாக நிரூபிக்கப்பட்ட மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இரண்டு சிகிச்சைகள்: IVT- நரம்பு த்ரோம்போலிசிஸ் (Intravenous Thrombolysis) EVT- எண்டோவாஸ்குலர் சிகிச்சை - Endovascular Treatment (i.e Mechanical Thrombectomy) இந்த முறைகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, பக்கவாதம் சிகிச்சையில் நிஹிலிசம் (Nihilism) பரவலாக நடைமுறையில் இருந்தது. பக்கவாத சிகிச்சைக்காக நீங்கள் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன், பக்கவாதம் பற்றிய அடிப்படை முன்னெச்சரிக்கை அறிவு மிக முக்கியமானது, ஏனெனில் அது உடனடி நடவடிக்கை எடுக்க உதவும். FAST என்ற சுருக்கெழுத்து பக்கவாதம் காட்டக்கூடிய அறிகுறிகளைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள உதவும். F: Facial Droop - முகத்தின் ஒரு பக்கத்தில் எந்த அசைவும் இல்லாமல் இருப்பதை ஒருவர் அவதானிக்க முடியும் A: Arm Drift - ஒரு கை சறுக்கலாக இருக்கும் S: Speech - மெல்லிய மற்றும் முணுமுணுப்பு பேச்சு பொதுவாக செவிக்கு புலப்படாது T: Time - மருத்துவ உதவி பெற நேரம் ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவதாக சந்தேகிக்கபட்டாலோ, குறிப்பிடப்பட்ட அறிகுறிகள் தென்பட்டாலோ, அவசர சிகிச்சைப் பிரிவை அ ணுகுவது மிக முக்கியமானதாகும். அவருக்கு நான்கரை மணி நேரத்திற்குள், நோயறிதல் மற்றும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். நோயாளியை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்ற பிறகு என்ன நடக்கிறது என்பதற்கான அறுபது நிமிட சிகிச்சை மற்றும் நடைமுறை பற்றிய விளக்கங்கள்: சுமார் பத்து நிமிடங்களில், நோயாளிக்கு அவசர மருத்துவர் வருகை தருகிறார். சுமார் பதினைந்து நிமிடங்களில், நோயாளி நரம்பியல் நிபுணர்களால் பரிசோதிக்கப்படுகிறார். சுமார் இருபத்தைந்து நிமிடங்களில், மாறுபட்ட CT brain scan ஸ்கேன் மற்றும் MRI சம்பந்தப்பட்ட நோயறிதல் நெறிமுறையைப் பின்பற்றி செய்யப்படுகிறது. நாற்பத்தைந்து நிமிடங்களில், scan results பொதுவாக வந்துவிடும் அதன் பின் நிலைமையை பகுப்பாய்வு செய்து சிகிச்சை பற்றி விவாதிக்கப்படுகிறது. அறுபது நிமிடங்களில், நோயாளி த்ரோம்போலிடிக் (thrombolytic) சிகிச்சையுடன் தொடங்கப்படவேண்டும். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபர் நான்கரை மணிநேர உயிர் காக்கும் அவசரகாலத்திற்க்குள் அவசர சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்டால், கட்டியை உடைப்பதற்கோ அல்லது கரைப்பதற்கோ, த்ரோம்போலிடிக் (thrombolytic) முறை நோயறிதலுக்குப் பிறகு உடனடியாக நரம்பு வழியாக ஊசி போடப்படும். மூளையின் பெரிய நாளத்தில் உறைதல் இருக்கும் போது, ​​த்ரோம்போலிடிக் (thrombolytic) முறையுடன், மெக்கானிக்கல் த்ரோம்பெக்டோமி (mechanical thrombectomy) மூலம் உறிஞ்சப்படுவதனால் உறைதலை அகற்ற உதவுகிறது. பக்கவாதம் தொடங்கிய நான்கரை மணிநேர அவசரகாலத்திற்க்குள் நோயாளியை மருத்துவமனைக்குக் கொண்டு சேர்க்காமல், காலம் தாழ்ந்து வரும் சந்தர்ப்பங்களில் 24 மணிநேரத்தில் நேரடியாக த்ரோம்பெக்டோமி (thrombectomy) மூலம் மூளையின் பெரிய நாளத்தில் அடைப்பு இருந்தால் அதை நீக்க உடனடியாக திட்டமிடப்படும். பின்புற சுழற்சி பக்கவாதம் நிலையில், உயிர் காக்கும் அவசரகாலம் த்ரோம்போலிசிஸ் (thrombolysis) ஆறு மணிநேரம் மற்றும் த்ரோம்பெக்டோமி (thrombectomy) க்கு இருபத்து நான்கு மணிநேரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இஸ்கிமிக் ஸ்ட்ரோக்கிற்கு இரண்டு சிகிச்சை விருப்பங்களும் அனுபவமிக்க மருத்துவ வல்லுநர்கள் மூலம் வழங்கப்படுகிறது. உடலில் பெரிய தாக்கங்கள் இல்லாமல் மக்கள் தங்கள் இயல்பான உடல் செயல்பாடுகளுக்கு விரைவில் திரும்ப உதவுவதற்காக 24 மணி நேரமும் அனுபவமிக்க மருத்துவ வல்லுநர்கள் இருக்கிறார்கள். நோயாளி சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படாவிட்டால் பக்கவாதம் மிகவும் ஆபத்தானது மற்றும் சேதத்தின் தீவிரம் மீளமுடியாது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுபவமிக்க நரம்பியல் நிபுணர்கள் (https://www.sriramakrishnahospital.com) பக்கவாதம் மற்றும் அதன் பிரச்சனைகளை கையாள நிறைய நவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் மற்றும் உத்திகளை நடைமுறைபடுத்துகிறார்கள். கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிறந்த நரம்பியல் நிபுணர்களுடன் உங்கள் தேவையை பற்றி ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. நோயாளி தொலைதூரத்தில் இருப்பவரானால், நோயாளின் உடல்நலப் பிரச்சினைகளுக்கு உடனடி ஆலோசனை ஆன்லைன் வீடியோ கால் மூலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவார்கள் ஆலோசனையை வழங்குகிறார்கள். பயனுள்ள சிகிச்சையை வழங்க டாக்டர்கள் 24 மணி நேரமும் இருக்கிறார்கள். ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் சேவைகள் உலகளாவிய அளவுகோல்களுக்கு இணையாக உள்ளன, மக்களுக்குத் தேவையான நேரத்தில் தேவையான சிகிச்சையைப் பெறுவதை உறுதி செய்கிறது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை பற்றி ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை 1975 இல் தொடங்கப்பட்ட ஒரு புகழ் பெற்ற மருத்துவ நிறுவனம். கோயம்புத்தூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை பல வழிகளிலும் சேவைகளாலும் மருத்துவ வரலாற்றின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. உண்மையில், இது நவீன இந்தியாவின் சுகாதாரப் புரட்சியின் ஒருங்கிணைந்த பகுதியாகும். எஸ்என்ஆர் சன்ஸ் தொண்டு நிறுவனத்தால் நிறுவப்பட்டு நடத்தப்படும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறது. உயிர்க்கொல்லி நோய் பாதிப்புகள் முதல் அன்றாட வியாதிகளுக்கான சிகிச்சைகள் வரை, அதிநவீன தொழில்நுட்பம், அதிநவீன அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ நுட்பங்களைப் பயன்படுத்தி அனைத்து தரப்பு நோயாளிகளுக்கும் சிறந்த மருத்துவ சேவைகளை வழங்கிவரும் மக்களுக்கான மருத்துவமனை ஆகும். https://www.youtube.com/c/SriRamakrishnaHospital https://www.facebook.com/SriRamakrishnaHospital https://en.wikipedia.org/wiki/Sri_Ramakrishna_Hospital

கால் எலும்பை நீக்காமல் இந்தியாவின் முதல் வெற்றிகரமான எலும்பு கட்டி அறுவை சிகிச்சை: புற்றுநோயை வென்றார் ஒன்பது வயது சிறுமி

கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா:

தொடைப்பகுதியில் வீக்கம் உள்ளதா என்று பரிசோதித்தபோது ஒன்பது வயது சிறுமியின் காலில் மிகவும் அரிதான எலும்பு கட்டி கண்டறியப்பட்டது. இதை அடுத்து சிறுமியின் காலில் எந்த ஒரு எலும்பையும் நீக்காமல் கோயமுத்தூரில் முதல் வெற்றிகரமான எலும்பு கட்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

மார்ச் 2021 இல், ஒன்பது வயது சிறுமியின் பெற்றோர் குழந்தையின் இடது தொடையில் வீக்கம் ஏற்பட்டதற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் எலும்பியல் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றனர். முழுமையான பரிசோதனைக்குப் பிறகு, சிறுமி எலும்புக் கட்டியின் அரிய வடிவமான ஈவிங்ஸ் சர்கோமாவால் (Ewing’s sarcoma)பாதிக்கப்பட்டிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

ஈவிங்ஸ் சர்கோமா ( Ewing’s sarcoma) என்றால் என்ன?

ஈவிங்ஸ் சர்கோமா என்பது எலும்புகளில் ஏற்படும் அரியவகைப் புற்றுநோய், இது பொதுவாக குருத்தெலும்பில் அல்லது இடுப்பு பகுதியில் உள்ள நரம்புகளுக்கு அருகில் தொடையில் உள்ள எலும்பிலும் ஏற்படும்.

இப்புற்றுநோயின் காரணம் தெளிவாக இல்லை என்றாலும். இது முக்கியமாக 20 வயதுக்குட்பட்டவர்களை பாதிக்கிறது. சதைப் பரிசோதனை, CT ஸ்கேன் மற்றும் MRI ஸ்கேன் மூலம் வடிவத்தில் அதன் வளர்ச்சியைத் தீர்மானிக்க உதவுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்நோயினால் 5000க்கும் குறைவான பாதிப்புகள் பதிவு செய்யப்படுகின்றன.

சிறுமிக்கு எலும்பு கட்டி இருப்பது கண்டறியப்பட்ட பிறகு, மிக வேகமாக வளர்ந்து வரும் புற்றுநோய் செல்களைக் அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. புற்றுநோய் செல்களை ஒடுக்கவும் அழிக்கவும் சிறுமி கீமோதெரபிக்கு உட்படுத்தப்பட்டார். கீமோதெரபி என்பது உடலில் வேகமாக வளரும் செல்களைக் அழிக்கப் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான மருந்துகள் ஆகும்.

கீமோதெரபி சிகிச்சையின் 3 சுழற்சிகளுக்குப் பிறகு, கட்டியின் அளவு கணிசமாகக் குறைந்தது. சவாலான தொடை எலும்பை காலில் இருந்து வெட்டாமல் கட்டியை அகற்றுவதற்க்கும். குழந்தையின் காலைக் காப்பாற்றுவதற்கும், பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் புற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களின் மிகவும் அனுபவம் வாய்ந்த குழு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்வதற்கு தயாரானது.

குழந்தையின் வயது இந்த நிபுணர்களுக்கு மிகப்பெரிய சவாலானதாக இருந்தது, பொதுவாக பாதிக்கப்பட்ட எலும்பு அகற்றப்பட்டு மாற்றுக்கு உலோகங்களால் ஆன எலும்பு வடிவங்கள் உபயோகப்படுத்தப்படும். இச்சிறுமிக்கு நீளமான அளவு எலும்பு பாதிக்கப்பட்டிருந்ததால் உலோக மாற்றுமுறை இயலாததாகியது. எனவே எக்ஸ்ட்ராகார்போரியல் ரேடியோ தெரபி (extracorporeal radiotherapy) என்ற சிகிச்சையின் மூலம் பாதிக்கப்பட்ட எலும்பு அகற்றப்பட்டு பின் மீண்டும் எலும்புகள் சேர்க்கப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சை 10 ஜூலை 2021 அன்று செய்யப்பட்டது. ஒவ்வொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் புற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழுவினால் எடுக்கப்பட்டது. டாக்டர்கள் கட்டி அகற்றுதலை வெற்றிகரமாக செய்தனர் ப்ளேட்ஸ் மற்றும் ஸ்க்ரூஸ் மூலம் அகற்றிய எலும்பு மறுபடியும் பொருத்தப்பட்டது. கட்டி அகற்றுதல் பொதுவாக முழு எலும்பு அல்லது பகுதி அகற்றப்படுவதற்கு பதிலாக, புற்றுநோய் கட்டி மட்டும் சிறிய கீறல்களால் அகற்றப்பட்டு, உலோகம் உபயோகப்படுத்தப்படுகிறது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர்களின் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி எலும்புக்கு கதிர்வீச்சு பயன்படுத்தப்பட்டது. இந்த புதுமையான செயல்முறை SRIOR ஆல் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் அனைத்து எலும்பு கட்டி சிகிச்சைகளுக்கும் இம்முறை பயன்படுத்தபடுகிறது. எலும்பு துண்டிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, புற்றுநோயியல் துறையில் சமகால மாற்றங்களைக் கொண்டுவர SRIOR தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. குழந்தை சுமார் 10 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்ய பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. கவனிப்புக்குப் பிறகு, சிறுமி எழுந்து நடந்தார்

இந்த அறுவை சிகிச்சை புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் குழுவால் செய்யப்பட்டது: டாக்டர் கார்த்திகேஷ், டாக்டர் பார்கவி, எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள்: டாக்டர் மோகன், டாக்டர் கோகுல், கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர்கள்: டாக்டர் கார்த்திகா, டாக்டர் கிருஷ்ணபிரியா, டாக்டர் விவேக், டாக்டர் சேதுமாதவன், மயக்க மருந்து நிபுணர்: டாக்டர் ஜிபி . சுந்தர்ராஜ், மற்றும் மருத்துவ புற்றுநோயியல் நிபுணர்: டாக்டர் பி. குஹான், SRIORன் இயக்குநர் அவர்களின் கூட்டுப் பார்வையும் உறுதியும் புற்றுநோயிலிருந்து மீண்டவரை வீடு திரும்பச் செய்தது.

மருத்துவ தொழில்நுட்பத்தில் புதுமையுடன், புதிய அணுகுமுறைகள் மற்றும் நுட்பங்கள் முன்னேற்ற சிகிச்சைக்கு வழிவகுத்தன. இப்பகுதியின் முதல் வெற்றிகரமான எலும்பு கட்டி அறுவை சிகிச்சையை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை செய்துள்ளது.

மருத்துவத் துறையில் நிபுணர்களாக இருக்கும் மருத்துவர்களுடன் கலந்தாலோசிக்க மருத்துவமனைக்குச் செல்லவும்.

உடல்நலப் பிரச்சினைகளுக்கு உடனடி ஆலோசனை தேவைப்படுவோர்க்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர்கள் ஆன்லைன் வீடியோ கால் மூலம் ஆலோசனையை (https://www.sriramakrishnahospital.com) வழங்குகிறார்கள்.

பயனுள்ள சிகிச்சையை வழங்க டாக்டர்கள் 24 மணி நேரமும் இருக்கிறார்கள். ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் சேவைகள் உலகளாவிய அளவுகோல்களுக்கு இணையாக உள்ளன, மக்களுக்குத் தேவையான சிகிச்சையைப் பெறுவதை உறுதி செய்கிறது.பகிர்கபக்கம் விரும்பியுள்ள பக்கங்கள்

அரசு ஊழியர்கள் வாங்கும் லஞ்சங்கள் பற்றியும் , காவல் துறையினரின் செய்யும் அதிகார துஷ்பிரயோகங்கள் பற்றியும் , அரசியல் வாதிகளின் அராஜகங்களை பற்றியும் , ரவுடிகளின் அட்டூழியங்கள் பற்றியும் , தெரிவிப்பது.

Leave a Response