4 வயது சிறுமிக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை

Spread the love

posted on 03.10.2010

இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமி வர்ஷாவின் பெற்றோர் ஆரணி சிலக் சிட்டி லயன்ஸ் கிளப் நிர்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

ஆரணி சிறுமிக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை

ஆரணி சில்க் சிட்டி லயன்ஸ் கிளப் சார்பில், 4 வயது சிறுமிக்கு இலவசமாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஆரணி டவுன் சத்யா நகரில் வசிப்பவர் ஆனந்தன். டிரைவர். இவரது மனைவி லாவண்யா. இவர்களது 4 வயது மகள் வர்ஷாவுக்கு அடிக்கடி மார்பு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியை டாக்டரிடம் அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமி வர்ஷாவை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமிக்கு இதயத்தில் லேசான ஓட்டை ஏற்பட்டுள்ளது. ஆபரேஷன் செய்ய வேண்டும். இதற்கு 2 லட்சம் செலவாகும் என்று கூறியுள்ளனர். இதைக்கேட்டு சிறுமியின் பெற் றோர் அதிர்ச்சியடைந்தனர்.காரணம், கூலி தொழிலாளியான ஆனந்தனால் ரூ.2 லட்சம் செலவு செய்து மகளுக்கு ஆபரேஷன் செய்ய முடியாது.

இதனால் மனவேதனை அடைந்த வர்ஷாவின் தாய் லாவண்யா, ஆரணி சில்க் சிட்டி லயன்ஸ் கிளப் தலைவர் செந்தில்நாதன், செயலாளர் சீனிவாசன் ஆகியோரை நேரில் சந்தித்து தங்கள் நிலை குறித்து கூறினார். இதையடுத்து, லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவர் ஜெயக்குமாரை தொடர்பு கொண்ட செந்தில்நாதன், சீனிவாசன் ஆகியோர், சென்னை அப்பலோ மருத்துவமனையில் வர்ஷாவுக்கு இலவசமாக இருதய அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்தனர். அதன்படி, சில தினங்களுக்கு முன்பு அப்பலோ மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அனுராதா தலைமையில் சிறுமி வர்ஷாவுக்கு இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. தற்போது சிறுமி வர்ஷா நலமாக உள்ளார். வர்ஷாவின் பெற்றோர் நேற்று சில்க்சிட்டி லயன்ஸ் கிளப் நிர்வாகிகளை சந்தித்து நன்றி கூறினர்.

Leave a Response