திமுக பிரமுகர் வீட்டில் ஐடி ரெய்டு

அரசியல்

This image is unavailable

திமுக பிரமுகர் வீட்டில் ஐடி ரெய்ட்! ஆதரவாளர்களுக்கு உணவு பொட்டலங்கள் விநியோகம்

கோவையில்  ஐடி ரெய்டு நடக்கும் திமுக நிர்வாகி வீட்டின் முன்பு குவிந்து வருபவர்களுக்குப் பிஸ்கட் மற்றும் பிரியாணி, தண்ணீர், நாற்காலி ஆகியவற்றை விநியோகம் செய்துவருகின்றனர்.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் மே 26 அன்று காலை முதல் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, அமைச்சருக்குச் சொந்தமாகச் சென்னை, கோயம்புத்தூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருக்கும் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முக்கியமான  அரசு ஒப்பந்ததாரர்களுக்குச் சொந்தமான 40 இடங்களில் வருமான வரித் துறையினர் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அண்ணன் அசோக் வீட்டின் முன் கூடிய அவரது ஆதரவாளர்கள், வருமான வரித் துறையினரின் வாகனங்களைச் சேதப்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கோவையில் திமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயனின் வீட்டின் முன்பு குவிந்துள்ள நபர்களுக்குப் பிஸ்கட், தண்ணீர் பாட்டில் போன்ற உணவு பொட்டலங்கள் மற்றும் சேர் ஆகியவை அவர்களுக்குக் கொடுத்து வருகின்றனர் திமுகவினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: