you are here Home » சட்டம்

சட்டம்

கண்காணிப்பு கேமராவிலிருந்து பெறப்படும் தகவல்கள்  ஆவணமாகக் கருதப்படும்.

கண்காணிப்பு கேமராவிலிருந்து பெறப்படும் படங்கள் மற்றும் Hard Disc, Compact Disc, Pen Drive ஆகியவற்றிலிருந்து பெறப்படும் தகவல்கள் சாட்சிய சட்டம் பிரிவு 3-ன் கீழ் ஆவணமாகக் கருதப்படும்.

விசாரணை நீதிமன்றத்திற்கு கண்காணிப்பு கேமராவில் உள்ள படங்களைப் பார்த்து எதிரியின் அடையாளத்தை உறுதி செய்து கொள்ளும் அதிகாரம் உண்டு. அவ்வாறு பெறப்படும் தகவல்களை முதல்நிலை சாட்சியமாகவோ அல்லது இரண்டாம் நிலை சாட்சியமாகவோ இருந்தால் கூட அதைப் பார்க்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உண்டு. நீதித்துறை நடுவர் மின்னணு பதிவு ஆவணத்தைச் சாட்சியாகப் பெறும்போது அதைப் பார்த்து விட்டு அந்தப் பதிவை CD யிலோ அல்லது Pen Drive விலோ பதிவேற்றம் செய்து பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஒரு வழக்கு அமர்வு நீதிமன்றத்தால் விசாரிக்க வேண்டிய வழக்காக இருக்கும்போது நீதித்துறை நடுவர் பதிவேற்றம் செய்த ஒளிப்பதிவுகளை அமர்வு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். விசாரணை நீதிமன்றம் கண்காணிப்பு கேமராவிலிருந்து ஒளிப்பதிவு செய்யப்பட்ட படங்கள்குறித்து எதிரியிடம் Crpc sec 313-ன் கீழ் கேள்வி எழுப்ப வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

K.Ramajayam @Appu Vs The Inspector of Police 2016-1-MWN-CRI-408-DB

ஆடல், பாடல், கரகாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடத்த தரப்படும் மனுக்கள்மீது 7 நாட்களில் முடிவெடுக்க வேண்டும்: மதுரை ஐகோர்ட் உத்தரவு

பல்வேறு மாவட்டங்களில் கோயில் விழாக்களில் ஆடல், பாடல்,  போன்ற கலை நிகைழ்ச்சிகள் போன்றவற்றை நடத்த அனுமதிக்கும்படியும், உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் காவல் துறையினரிடம் மனுக்கள் அளிக்கப்படுவது வழக்கம்.

இதன் மீது காவல் துறையினர்  உரிய காலத்துக்குள் அனுமதி வழங்கக் காவல் துணையினருக்கு உத்தரவிடுமாறு மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.டி.ஆஷா அவர்கள் மனுதாரர்கள் தரப்பில், கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி அளிக்கப்பட்ட மனுக்கள்மீது காவல் துறையினர் முடிவெடுக்காமல் உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில், ஆடல், பாடல், கரகாட்டம், கபடி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டுத் தரப்படும் மனுக்கள்மீது பதில் அளிக்காமல் இருப்பது ஏற்புடையதல்ல. இந்த மனுக்கள்மீது காவல் ஆய்வாளர்கள் 7 நாட்களில் பரிசீலனை செய்து பதில் அளித்து உத்தரவு அளிக்க வேண்டும். 7 நாட்களுக்குள் மனுக்கள்மீது உரிய உத்தரவு  கொடுக்கப்படாவிட்டால் அனுமதி வழங்கியதாகக் கருதப்படும்.

இது தொடர்பாக அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இங்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஆடல், பாடல், கரகாட்டம், கபடி உள்ளிட்ட நிகழ்வுகளுக்குரிய நிபந்தனைகளுடன் காவல் துறையினர் அனுமதி வழங்க வேண்டும். என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

vinar dapibus leo.

%d bloggers like this: