கோவில்பட்டி வரலாற்றில் சிறப்பான நிகழ்வு.

கோவில்பட்டி ஒன்றியம் திட்டங்குளத்தில் கடந்த ஓராண்டு காலத்திற்கும் மேலாகச் செயல்பட்டு வரும் தினசரி காய்-கனி சந்தைக்குப் பெருந்தலைவர் கு. காமராஜர் பெயரில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
நிகழ்விற்கு சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் மாண்புமிகு. பெ. கீதாஜீவன் M.Com, B.Ed. அவர்கள் தலைமை வகித்தார். தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மாண்புமிகு மு. அப்பாவு அவர்கள் கட்டிட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இருபெரும் முக்கிய தலைவர்கள் பசும்பொன். உ. முத்துராமலிங்கத் தேவர் பெயரிலும் பெருந்தலைவர் கு. காமராஜர் பெயரிலும் இரண்டு காய்-கனி சந்தைகள் கோவில்பட்டிக்கு கிடைத்ததை கொண்டாடுவோம். விழாவில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க. தமிழரசன், செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, மற்றும் நிர்வாகிகள் வழக்கறிஞர் ரவிக்குமார், செண்பகராஜ், மாரிமுத்துக்குமார், ஜெகன், செல்வக்குமார், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
https://neethidevadhai.com/https-neethidevadhai-com-subash-kadambursrajuju/
விழா ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திட்ட பெருந்தலைவர் கு. காமராஜர் காய்கனி அங்காடியின் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு, கோவில்பட்டி
கோவில்பட்டி ஒன்றியம் திட்டங்குளத்தில் கடந்த ஓராண்டு காலத்திற்கும் மேலாகச் செயல்பட்டு வரும் தினசரி காய்-கனி சந்தைக்குப் பெருந்தலைவர் கு. காமராஜர் பெயரில்…
Comments