கண்ணகி நகர் தங்கம் கார்த்திகா
கண்ணகி நகர் தங்கம் கார்த்திகா
சென்னை நகரின் மறு குடியேற்றப் பகுதியான கண்ணகி நகர். இங்குள்ள குடியிருப்பாளர்களில் பெரும்பாலானோர் தூய்மைப் பணியாளர்கள்; இந்தச் சூழல் அங்கு வாழும் மக்கள் மீது தவறான பார்வையை ஏற்படுத்தியது. ஆகவே, இந்த அவப்பெயரை மாற்றவும், இளம் பெண்களுக்கு நம்பிக்கை ஊட்டவும் ‘UNIVERSAL KANNAGI NAGAR WOMEN’S KABADDI CLUB’ உருவானது.
கபடி: ஒரு புதிய விடியல்
இந்தக் கபடி கிளப் விளையாட்டு மூலம் சமூக மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று உறுதியாக நம்பியது. அந்தக் குழுவில் இருந்த வீராங்கனைகளில் முக்கியமானவர் தான் கார்த்திகா. கார்த்திகாவின் தந்தை ஒரு தூய்மைப் பணியாளர். மேலும், தாய் ஆட்டோ ஓட்டி குடும்பத்தை நடத்தினார். வறுமையும் சவால்களும் நிறைந்த சூழலிலும் கார்த்திகா தனது கபாடி கனவில் இருந்து பின்வாங்கவில்லை.
சர்வதேசப் புகழ்: பஹ்ரைன் சாதனை
கார்த்திகா பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் (Under-18) கபடிப் போட்டியில் பங்கேற்றார். மேலும், அவர் இந்தியப் பெண்கள் அணியின் துணைக் கேப்டனாகவும் செயல்பட்டார். இறுதிப் போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த ஈரானை எதிர்த்து விளையாடியது. இந்திய அணி 75-21 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதன் விளைவாக, கார்த்திகா தலைமையிலான இந்திய அணிக்குச் தங்கப் பதக்கம் கிடைத்தது. இது இந்தியக் கபடி வரலாற்றில் ஒரு பொன்னான தருணம்.
சமூகத்தின் மீதான தாக்கம்
கார்த்திகாவின் இந்த வெற்றி சமூகத்தின் மனப்பான்மையில் ஏற்பட்ட ஒரு பெரிய மாற்றம். உண்மையில், கண்ணகி நகரின் இளைய தலைமுறையினர் இப்போது நம்பிக்கை பெற்றுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கார்த்திகாவை நேரில் அழைத்து ரூபாய் 25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி, அவருக்குப் பாராட்டையும் தெரிவித்தார். சுருங்கச் சொல்லின், இது அவருடைய தனிப்பட்ட குடும்ப வறுமையையும், பின்தங்கிய பகுதிகளின் கனவுகளுக்கும் முதலீடும் செய்வதாகும்.
இதேபோன்று கடந்த மாத இதழைப் படிக்க, நீதி தேவதை வலைத்தளத்தின் அக்டோபர் மாத இதழைப் பார்க்கவும்.
https://www.facebook.com/275567685877358
கண்ணகி நகர் தங்கம் கார்த்திகா சென்னை நகரின் மறு குடியேற்றப் பகுதியான கண்ணகி நகர். இங்குள்ள குடியிருப்பாளர்களில் பெரும்பாலானோர் தூய்மைப் பணியாளர்கள்; …
