அரசியல்

திமுகவின் அரசியல்

இவ்வளவு பெரிய விழா நடத்த இல.கணேசனின் அண்ணன் நாட்டுக்கு என்ன தியாகம் செய்தார் என்பதுதான் தெரியவில்லை.

அவர் ராணுவத்திலும் இல்லை, கட்சியின் பெரும் போராட்டத்திலும் இல்லை, அரசியல் பதவியிலும் இல்லை,பெரும் தியாகமோ அர்பணிப்போ நாட்டுக்காக செய்ததுமில்லை

அவரின் ஒரே சாதனை இல.கணேசனுக்கு அண்ணனாக பிறந்தது

அவருக்குத்தான் முதல்வர்களும் கவர்னரும் கலந்து கொண்ட பெருவிழா

பாஜகவில் எப்படியான ஆட்களெல்லாம் ஊடுருவியிருந்தார்கள் என்பதற்கு இவையெல்லாம் சான்றுகள்

நாட்டுக்கும் கட்சிக்கும் எதுவும் பெரிதாக செய்திராத ஒருவருக்கு கவர்னரும் இரு மாகாண முதல்வர்களெல்லாம் வந்து வாழ்த்துவது என்பது எதையோ சூசகமாக சுட்டிகாட்டும் விஷயம்

முன்பெல்லாம் திருமண வீடுகளும் இன்னும் சில விஷேஷங்களும் அரசியலாகும், இப்பொழுதெல்லாம் 80 வயதை தாண்டிய விழாக்களெல்லாம் வலுகட்டாயமாக அரசியல் மேடையாக்கபடுகின்றன‌

இல.கணேசன் குடும்பம் பிராமண குடும்பம் என்பது எல்லோரும் அறிந்தது, அந்த மேடையில் பிராமண எதிர்ப்பினை பகிரங்கமாக செய்யும் திமுக கலந்து கொள்வது என்பது, அதுவும் பாஜக குடும்பத்தாரின் விழாவில் கலந்து கொள்வது என்பது ஆயிரம் கேள்விகளை எழுப்புகின்றது

யாரையும் நம்பமுடியாததுதான் அரசியல் ஆனால் இப்படியெல்லாமும் நடக்குமா என ஆச்சரியபட செய்வதும் அரசியலே

நமது அரைகுறை அரசியல் நோக்கில் பார்த்தால் ஒரு விஷயம் மெல்ல விளங்குவது போல் தெரிகின்றது, இது எமது அனுமானமே தவிர வேறொன்றுமில்லை

விஷயம் ஆழ கவனித்தால் கட்சியில் இருந்து கவர்னராகி சென்றாலும் தமிழிசையும் இல.கணேசனும் தங்கள் தமிழக பாஜக பிடியினை விட்டுவிட தயாராக இல்லை

அண்ணாமலையின் எழுச்சி இவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி கொடுக்கவில்லை

இதனால் அண்ணாமலைக்கு செக் வைப்பது போல அல்லது அவரை எரிச்சலூட்டுவது போல சில காரியங்களை செய்கின்றார்கள், இந்த செயலுக்கு கட்சியின் பழந்தலைகள் அதாவது நேற்று வந்த அண்ணாமலை என புலம்பும் கோஷ்டிகளும் பின் செல்கின்றன‌

அண்ணாமலைக்கு நெருக்கடி கொடுக்கும் காரியங்களை திமுக தன் பழைய சங்கில் மூலம் அரங்கேற்றுகின்றது, அப்படித்தான் இருப்பது போல் தெரிகின்றது

ஆனால் இதனால் என்னாகும் என்றால் தமிழிசையோ இல.கணேசனோ நாளை மாகாண அரசியலுக்கு திரும்பினால் கிடைத்த 4 வோட்டுக்களும் அவர்களுக்கு கிடைக்காது என்பதுதான் தெரிகின்றது

கருப்பு சிகப்பு வர்னம் பூசிய பறவைகள் தாமரை தோட்டத்தில் உலாவியதையும் இப்பொழுது அவர்கள் சாயம் கலைவதையும் தமிழகம் கண்டுகொண்டிருக்கின்றது

நாம் , நான் என்பதை விட நாடு கட்சி என்பதே சிறப்பு, அப்படிபட்ட சிந்த்னை இல்லாதவர்கள் என்னென்ன செய்வார்கள் என்பதை காலம் காட்டி கொண்டிருக்கின்றது

நிச்சயம் அந்த சந்திரசேகர ராவும், மம்தா பானர்ஜியும் எப்படியெல்லாம் தமிழகத்தோடு தொடர்புபடுகின்றார்கள், பாஜகவின் பல திட்டங்கள் எப்படி சமாளித்து முறிக்கபடுகின்றன என்பதெல்லாம் இதோ வெளிவருகின்றது

இதுகாலமும் கண்ணுக்கு தெரியாமல் இருந்த ஆணிவேர் சல்லிவேரெல்லம் எக்ஸ்ரே எடுத்தது போல் இதோ தெரிகின்றது

அண்ணாமலை மிக மவுனமாக பல காட்சிகளை மக்கள் முன் காட்டுகின்றார், அவரை எதிர்ப்பதாக நினைந்து இதுகாலமும் மறைவாய் இருந்த கூட்டமெல்லாம் ஒன்றாய் வந்து தன்னை வெளிகாட்டி நிற்கின்றது

யாரெல்லாம் கமலாயத்தில் இருந்து தாமரை மொட்டுக்களை முடக்கும் வேலையினை செய்தார்களோ அவர்களின் ஒவ்வொரு முகமாக தெரிகின்றது

இனி என்னாகும்?

இருந்து பாருங்கள், ராதா கிருஷ்ணன் குடும்பத்தாருக்கு விழா, தமிழ்சை அக்கா வீட்டு வேலைக்காரனுக்கு விழா, குமரி அனந்தனின் கார் டிரைவரவருக்கு விழா, பொன்னாரின் ஒன்றுவிட்ட சகோதரனுக்கு விழா என விழாக்கள் பெருகிகொண்டே இருக்கும், பல வேடங்கள் கலைந்து கொண்டே இருக்கும்

ஆம், இப்பொழுதெல்லாம் விழா நடத்த ஒரே தகுதி பிரபலங்கள் வீட்டில் நீண்ட ஆயுளோடு இருந்தால் போதும் மற்றபடி நாட்டுக்கோ சமூகத்துக்கோ ஏன் கட்சிக்கோ கூட ஏதும் செய்திருக்க அவசியமே இல்லை