ஆன்மீகம்

19.09.2.21

11.00 AM

மேல்மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு பங்காரு அடிகளார் மனைவி மற்றும் மகன் போட்டி இடுகின்றனர்.

இந்நிலையில் பங்காரு அடிகளாரின் மனையின் சொத்து மதிப்பு தெரியவந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் ஊராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக, பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் மாற்று வேட்பாளராக பங்காரு அடிகளாரின் மகன் செந்தில்குமாரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். முன்னதாக போட்டியிடும் லட்சுமி இதற்கு முன் 2 முறை மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மேல்மருவத்தூர் ஊராட்சி பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட காரணத்தினால், இவர்கள் போட்டியிட முடியாத சூழல் உருவானது. மீண்டும் இந்த ஊராட்சி பொதுத் தொகுதியாக மாற்றி உள்ளதால், வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இவர்கள் இருவரை தவிர மேல்மருவத்தூர் ஊராட்சிக்கு இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை. எனவே இருவர் மனுக்கள் ஏற்கப்பட்டால், அதில் ஒருவர் மனுவை திரும்பப் பெற வாய்ப்புள்ளது.

மனுதாக்கல் செய்ததன் மூலம் பங்காரு அடிகளார் மனைவியின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 250 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது.