சட்டம்

நீர் நிலைகள், நிலங்கள் மீது நிகழும் யுத்தம்….
நீர்நிலைகள் பதுகாக்க எனது இன்றைய உயர்நீதிமன்றவழக்கு….
Madras HC , WP No 131313/2023 Filed on 09-10-2023 (K.S.RADHAKRISHNAN VS STATE OF TAMIL NADU) இந்திய மாநிலங்களில் அதிகம் நீர் பற்றாக்குறை மாநிலம் என்று கருதப்பட்டதுதான் தமிழகம். அதனால்தான் அதிகம் தொழில்துறைகளுக்கான அனுமதிகள் காமராஜர் காலத்தில் கோரப்பட்டது. ஆனால் உண்மையில் நடந்து முடித்திருப்பது என்னவென்று பார்க்க வேண்டியது இக்காலத்தின் அவசியமாகி இருக்கிறது.
நாடு சுதந்திரம் பெற்ற 1947 இல் தமிழகத்தின் கிராமம் சிற்றூர் பேரூர் சார்ந்த விவசாயநிலப் பகுதிகளில் ஏறத்தாழ 60 ஆயிரத்திற்கு மேலான ஏரி குளம் குட்டை பாசனங்கள் நிரம்பி வாடைக்கும் கோடைக்கும் வளம் சேர்த்ததை இங்கே நாம் ஞாபகப்படுத்த வேண்டியிருக்கிறது. இரண்டு பருவ கால காற்று மழைகளின் போதும் இவை அனைத்தும் நிரம்பி மறுகால் சென்று வெள்ளிக்கெண்டைகளும் அயிரைகளும் பெருகி வயலில் துள்ளியதாக வரலாறு சொல்லுகிறது. கிராமப்புற மக்கள் விவசாயத்திற்கு மட்டும் அன்றி குடிநீருக்காகவும் வீட்டு தேவைகளுக்காகவும் இந்த குளம் குட்டைகள், கோவில் தெப்பங்கள் இருந்தே நீர் எடுத்துக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள். இத்தகைய நீர் ஆதார பகுதிகளில் குடியிருப்புகளை கட்டுவதற்கோ வேறு நோக்கத்தோடு அதை பயன்படுத்துவதற்கோ ஆங்கிலேயர் காலத்திலேயே குறிப்பான கிராமப்புற பொது மராமரத்து, ஆயக்காட்டு உரிமை சட்டங்கள் இருந்தன.
குளத்தையோ குட்டையையோ ஏரிகளையோ தனியார்கள் எந்த வகையிலும் பயன்படுத்த கூடாது என்று ஒப்பந்த அடிப்படையில் அவற்றைப் பொதுவில் வைத்து அந்த பகுதியில் விவசாய தேவைகளுக்கும் அதையே நீர் பிடிப்பு பகுதியாய் வைத்து அதன்மூலம் அக்கம் பக்கம் கிணறுகளில் நீர் பெருகி வறட்சிகாலத்தில் பயன்படுத்திக் கொள்ளவும் வழி செய்யப்பட்டிருந்தது. பிறகு ஏரிகள் வாய்க்கால்கள் சிறு அணைகள் என்று நீர் மேலாண்மையானது கிராமப்புற விவசாய நிலங்களை மட்டுமே சார்ந்து இருந்தததாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதையே முறையாக ஏற்றுக் கொண்டு இன்றைய தமிழகக் கட்சிகள் ஆட்சிக் கட்டிலுக்கு வந்த 75 வருடங்களுக்கு பிறகு 60,000 ஏரி நீர் குளம் குட்டைகள் இருந்த இடத்தில் இன்று வெறும் 30,000 த்திற்கும் குறைவான குளம் குட்டைகளை மிஞ்சி இருக்கின்றன.மற்ற அனைத்தும் அருகி மாயமாய் மறைந்தே போய்விட்டன. நகர விரிவாக்கம் கிராம விரிவாக்கம் என்கிற பெயரில் இந்த குளம்குட்டைகளை மண்ணடித்து மனையடிகள் ஆக்கி புறம்போக்கு என்கிற பெயரில் ஆட்டையைப் போட்டவர்கள் யார்?
இவர்கள் எத்தனை பேர் மந்திரிகள் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் கந்துவட்டி லேவா தேவிக்காரர்கள் நில புரோக்கர்கள் ஏக்கர் கணக்கில் நிலங்களை வாங்கி மனையடி செய்து விற்பவர்கள்.இன்று ஒவ்வொருவரிடமும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன. ஏரிகளில் அணைகளில் குளங்களில் இவர்களின் நிலங்களுக்கான நீர் ரகசியமாக திறக்கப்படுகிறது.
Click here: மேலும் இம்மாத இதழை தொடர்ந்து படியுங்கள்
இப்படியான இவர்களால் மண்மூடி மேவி நிலங்கள் ஆகிவிட்ட குளம் குட்டைகள் தான் எத்தனை ஆயிரங்கள்?அதனால் நிலவிய பயிர் பெருக்கமும் சிற்றுயிர் பல்லுயிர் சுழற்சிகளும் எவ்வளவு வேதனையான முறையில் முடிந்து போயிருக்கும் என்பதை மனிதர்களாகிய நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இன்று வெறும் கழிவுகளும் குப்பைகளும் சேர்ந்து பயிர் நிலங்களில் மாசுகளை உண்டாக்கி அதிலிருந்து அநேகம் நுண்ணுயிர் கிருமிகள் பரவி உடல் நலக் கோளாறுகளும் நமக்கு ஏற்பட்டுவருகின்றன. உலகின் பல நாடுகளில் நீர் ஆதாரங்களைப் பாதுகாக்கிறார்கள் அந்தப் பகுதிகளை அத்துமீறி யாரேனும் அபகரித்தாலும் ஆக்கிரமிப்பு செய்தாலோ கடும் தண்டனைகளும் சட்டங்களும் அங்கே இருக்கின்றன. இங்கே தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்.
ஏறக்குறைய எல்லா குளம் குட்டைகளும் நீர் வழி போக்குவரத்துகளும் தடுக்கப்பட்டு இங்கு வானுயர்ந்த கட்டிடங்கள் எழும்பி கொண்டிருக்கின்றன. ..இதை கேட்பதற்கு எவரும் இல்லாத இந்த கொடுங்காலத்தில் இத்தகைய போக்கிற்கு எதிராக ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் ஒரு முறையும் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டாம் முறையும் தொடர்ந்து வழக்குகளை தாக்கல் செய்துள்ளேன். மூன்றாவது முறையாக ஆங்கிலய சட்டங்களின் ஆயக்காட்டு தீர்வைகளுக்கான உரிமைகள் கிராமப்புற பொது மராமத்து முறைகளை மறுபடியும் மீட்டுருவாக்கம் செய்ய இப்போது ம நான் இன்று சென்னை உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளேன்! குறிப்பாக மீந்திருக்கும் இந்த குளம் குட்டைகளையாவது காப்பாற்ற வேண்டி இந்தவழக்கை நான் தொடுத்திருக்கிறேன். அதன் சரத்துகளில் ஒன்றாக ஆங்காங்கே உள்ள கிராமப்புறத்தில் வாழும் விவசாய மக்களிடையே ஒருங்கிணைப்புக் குழுக்களை தேர்ந்தெடுத்து அவர்கள் கையில் இந்த குளம் குட்டைகளை ஒப்படைத்து அவற்றை ஆயக்காரர் தீர்வைகளுக்கான பொது மராமத்து உரிமைகளைப் பெற்றுத்தந்து அவற்றைப் பாதுகாத்தும் செப்பனிட்டும் இந்த நீராதாரங்களை எதிர்காலத்தில் காப்பாற்ற வேண்டும் என்பதையும் இணைத்துள்ளேன். இது ஒரு விழிப்புணர்வு இயக்கமாக மாற வேண்டும் இல்லையெனில் வெறும் பிளாட்டுகளும் அதை விற்று கொழுக்கும் தனிநபர்களின் கூடாரமாக தமிழ் நாடு மாறிவிடும். பேராசை பிடித்த மனிதர்களின் சுயலாபங்களுக்காக அதன் மக்கள் ஏன் வறட்சியை சந்திக்க வேண்டும். இந்த நிலையில், நீர்நிலைகள் பதுகாக்க எனது வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Madras HC WP/131313/2023 Filed on 09-10-2023 (K.S.RADHAKRISHNAN VS STATE OF TAMIL NADU)
கிரானைட் குவாரிகள் நடத்த ஏலம்… 11 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான அறிவிப்பு..!
மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகள் நடத்துவதற்கான ஏல அறிவிப்பை 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மதுரை,
மேலும் இம்மாத இதழை ஆன்லைனில் படிக்கவும்
மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் உள்ள குவாரிகளில், விதிகளை மீறி எடு்க்கப்பட்ட கிரானைட்டால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, ஐஏஎஸ் அதிகாரி சகாயம் குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்த பிறகு, 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, கிரானைட் குவாரிகள் நடத்துவதற்கு 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கிரானைட் குவாரிகளை நடத்துவதற்கான ஏல அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதில், மேலூர் தாலுகாவுக்கு உட்பட்ட சேக்கிபட்டி, அய்யாபட்டி மற்றும் திருச்சுனை ஆகிய இடங்களில், அரசு புறம்போக்கு நிலங்களில் அமைந்துள்ள பல வண்ண கிரானைட் குவாரிகளை 20 ஆண்டுகளுக்கு குவாரி குத்தகை உரிமம் வழங்க பொது ஏலத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.[/vc_column_text][vc_column_text]
கண்காணிப்பு கேமராவிலிருந்து பெறப்படும் தகவல்கள் ஆவணமாகக் கருதப்படும்.
கண்காணிப்பு கேமராவிலிருந்து பெறப்படும் படங்கள் மற்றும் Hard Disc, Compact Disc, Pen Drive ஆகியவற்றிலிருந்து பெறப்படும் தகவல்கள் சாட்சிய சட்டம் பிரிவு 3-ன் கீழ் ஆவணமாகக் கருதப்படும்.
விசாரணை நீதிமன்றத்திற்கு கண்காணிப்பு கேமராவில் உள்ள படங்களைப் பார்த்து எதிரியின் அடையாளத்தை உறுதி செய்து கொள்ளும் அதிகாரம் உண்டு. அவ்வாறு பெறப்படும் தகவல்களை முதல்நிலை சாட்சியமாகவோ அல்லது இரண்டாம் நிலை சாட்சியமாகவோ இருந்தால் கூட அதைப் பார்க்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உண்டு. நீதித்துறை நடுவர் மின்னணு பதிவு ஆவணத்தைச் சாட்சியாகப் பெறும்போது அதைப் பார்த்து விட்டு அந்தப் பதிவை CD யிலோ அல்லது Pen Drive விலோ பதிவேற்றம் செய்து பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஒரு வழக்கு அமர்வு நீதிமன்றத்தால் விசாரிக்க வேண்டிய வழக்காக இருக்கும்போது நீதித்துறை நடுவர் பதிவேற்றம் செய்த ஒளிப்பதிவுகளை அமர்வு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். விசாரணை நீதிமன்றம் கண்காணிப்பு கேமராவிலிருந்து ஒளிப்பதிவு செய்யப்பட்ட படங்கள்குறித்து எதிரியிடம் Crpc sec 313-ன் கீழ் கேள்வி எழுப்ப வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
K.Ramajayam @Appu Vs The Inspector of Police 2016-1-MWN-CRI-408-DB[/vc_column_text][vc_column_text]
ஆடல், பாடல், கரகாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடத்த தரப்படும் மனுக்கள்மீது 7 நாட்களில் முடிவெடுக்க வேண்டும்: மதுரை ஐகோர்ட் உத்தரவு
பல்வேறு மாவட்டங்களில் கோயில் விழாக்களில் ஆடல், பாடல், போன்ற கலை நிகைழ்ச்சிகள் போன்றவற்றை நடத்த அனுமதிக்கும்படியும், உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் காவல் துறையினரிடம் மனுக்கள் அளிக்கப்படுவது வழக்கம்.
இதன் மீது காவல் துறையினர் உரிய காலத்துக்குள் அனுமதி வழங்கக் காவல் துணையினருக்கு உத்தரவிடுமாறு மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.டி.ஆஷா அவர்கள் மனுதாரர்கள் தரப்பில், கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி அளிக்கப்பட்ட மனுக்கள்மீது காவல் துறையினர் முடிவெடுக்காமல் உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில், ஆடல், பாடல், கரகாட்டம், கபடி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டுத் தரப்படும் மனுக்கள்மீது பதில் அளிக்காமல் இருப்பது ஏற்புடையதல்ல. இந்த மனுக்கள்மீது காவல் ஆய்வாளர்கள் 7 நாட்களில் பரிசீலனை செய்து பதில் அளித்து உத்தரவு அளிக்க வேண்டும். 7 நாட்களுக்குள் மனுக்கள்மீது உரிய உத்தரவு கொடுக்கப்படாவிட்டால் அனுமதி வழங்கியதாகக் கருதப்படும்.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இங்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஆடல், பாடல், கரகாட்டம், கபடி உள்ளிட்ட நிகழ்வுகளுக்குரிய நிபந்தனைகளுடன் காவல் துறையினர் அனுமதி வழங்க வேண்டும். என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

